Ticker

6/recent/ticker-posts

ராகு கேது பெயர்ச்சி 2020 மீனம்

ராகு கேது பெயர்ச்சி 2020 மீனம்

   சூழ்நிலைகள் எதுவாக இருந்தாலும், எந்த சூழ்நிலையிலும் மாட்டாமல் மீண்டெழும் மீன ராசி அன்பர்களே.


2020-2022 ராகு கேது பெயர்ச்சியில் மீன ராசிக்கு போக சுகத்திற்கு அதிபதியான ராகுவானவர் மூன்றாம் இடத்திலும், ஞானத்திற்கு உரியவரான கேது ஒன்பதாம் இடத்திலும் நின்று அவரவர்களின் ஜெனன திசாபுத்திக்கு ஏற்ப கோச்சார ராகுவும், கேதுவும் சுப, அசுப பலன்களை அளிக்கின்றார்கள்.

திட்டமிட்ட சில காரியங்களில் வெற்றி வாகை சூடுவீர்கள். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். தந்தையின் உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் வேண்டும். பூர்வீக சொத்துக்கள் தொடர்பான செயல்பாடுகளில் நிதானத்துடன் இருக்க வேண்டும். சுபகாரியம் தொடர்பான முயற்சிகள் கைகூடி வரும்.

பெண்களுக்கு :

மனதிற்கு பிடித்த ஆபரணங்களை வாங்கி மகிழ்வீர்கள். பணிபுரியும் இடத்தில் உபரி வருமானம் கிடைப்பதற்கான சூழ்நிலைகள் உண்டாகும். வாரிசுகளின் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்க பெறுவீர்கள்.

மாணவர்களுக்கு :

மாணவர்களுக்கு கல்வியில் இருந்துவந்த மந்தத்தன்மை நீங்கி முன்னேற்றத்திற்கான சிந்தனைகள் வளரும். ஆசிரியர்களின் வழிகாட்டுதல் மற்றும் ஆலோசனைகள் மனதில் தெளிவினை ஏற்படுத்தும்.

கப்பல் கட்டுமான தொழில் புரிபவர்களுக்கு :

கப்பல் கட்டுமான தொழிலில் இருந்துவந்த சில தடைகள் குறையும். எதிர்பாராத புதிய ஒப்பந்தங்கள் கிடைப்பதற்கான சூழ்நிலைகள் உண்டாகும்.

நகை வியாபாரிகளுக்கு :

நகை தொடர்பான வியாபாரத்தில் நுணுக்கமான பல விஷயங்களை அறிந்து கொள்வீர்கள். நவீன தொழில்நுட்ப கருவிகளின் பயன்பாடுகளினால் மேன்மை அடைவீர்கள்.

வியாபாரிகளுக்கு :

வேலையாட்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை உண்டாகும். சொத்துக்கள் தொடர்பான பிரச்சனைகளில் எதிர்பாராத பிறமொழி நண்பர்களின் உதவியால் ஆதாயமான சூழ்நிலைகள் உண்டாகும்.

உத்தியோகஸ்தர்களுக்கு :

உயர் அதிகாரிகளிடம் தேவையற்ற கருத்துக்கள் பகிர்வதை குறைத்து கொள்ள வேண்டும். எதிர்பாராத இடமாற்றங்களின் மூலம் நெருக்கடியான சூழ்நிலைகள் ஏற்படலாம். உத்தியோகம் நிமிர்த்தமான பணிகளை விரைந்து முடித்து பாராட்டுகளை பெறுவீர்கள்.

விவசாயிகளுக்கு :

பாசன வசதி தொடர்பான பிரச்சனைகள் நீங்கி நன்மை அதிகரிக்கும். விளைச்சலை அதிகப்படுத்துவதற்கான அனுபவம் நிறைந்த வேலையாட்களின் ஆலோசனைகளும், உதவிகளும் சாதகமாக அமையும். சிறிய அளவிலான முதலீடுகளின் மூலம் மேன்மை அடைவீர்கள்.

அரசியல்வாதிகளுக்கு :

அரசியல்வாதிகள் தொண்டர்களின் விருப்பங்களை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். கட்சியின் தலைமை இடத்தில் வித்தியாசமான விளம்பர உத்திகளின் மூலம் பிரபலமடைவீர்கள். கட்சி பணிகளில் புதிய நபர்களிடம் தேவையற்ற விஷயங்களை பகிர்வதை குறைத்து கொள்ள வேண்டும்.

கலைஞர்களுக்கு :

கலைத்துறையில் இருப்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் மற்றும் திறமைகளை வெளிப்படுத்துவதற்கான சூழ்நிலைகள் சாதகமாக அமையும். சொகுசு வாகனங்களை வாங்கி மகிழ்வீர்கள். வெளியூர் மற்றும் வெளிநாடு தொடர்பான பயணங்களில் புதுவிதமான அனுபவம் கிடைக்க பெறுவீர்கள். உடல் மற்றும் மனச்சோர்விலிருந்து புத்துணர்ச்சி பெறுவீர்கள்.

வழிபாடு :

செவ்வாய்க்கிழமைதோறும் மஞ்சள் நிற பூக்களினால் அம்மனை வழிபாடு செய்துவர செய்யும் முயற்சிகளுக்கு உதவிகள் மற்றும் வழிகாட்டுதல் கிடைக்க பெறுவீர்கள்.


Post a Comment

0 Comments